உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் பெங்களூரூ தர்ப்பூசணி விற்பனை

திருப்புவனத்தில் பெங்களூரூ தர்ப்பூசணி விற்பனை

திருப்புவனம்: தர்ப்பூசணியில் ஊசி மூலம் சுவையூட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அடுத்து விற்பனை சரிந்த நிலையில் மஞ்சள் நிற பெங்களுரூ தர்ப்பூசணி விற்பனைக்கு வந்துள்ளது. கோடை காலங்களில் அனைத்து தரப்பினரும் விரும்பிச் சாப்பிடும் பழம் தர்ப்பூசணியாகும். விலை குறைவாகவும் தாகத்தை தணிப்பதாலும் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர். கிலோ ரூ.20 க்கு ஒரே ஒரு தர்ப்பூசணி வாங்கினால் கூட குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடலாம். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தர்ப்பூசணியில் ஊசி மூலம் பழுக்க வைக்கப்படுகிறது என அதிரடி சோதனை நடத்தினர். இதனால் தர்ப்பூசணி விற்பனை பாதிக்கப்பட்டன. இதற்கு மாற்றாக திருப்புவனம் சந்தையில் இந்நிலையில் திருப்புவனத்தில் பெங்களுரூவில் இருந்து கொண்டு வரப்படும் மஞ்சள் தர்ப்பூசணி விற்பனை களை கட்டியுள்ளது. கிலோ 40 ரூபாய் என விற்பனை செய்யப்படும் இந்த தர்ப்பூசணி இனிப்பு சுவை அதிகம் கொண்டதாகவும் தாகம் தணிப்பதாகவும் உள்ளது. வியாபாரிகள் கூறுகையில், பெங்களுரூவில் இருந்து இந்த தர்ப்பூசணி கொண்டு வரப்படுகிறது. உள்ளுர் தர்ப்பூசணியில் பிரச்னை கிளம்பியதால் விலைக்கு வாங்கி வந்து விற்பனையாகாமல் நஷ்டத்தை சந்தித்தோம். தற்போது இந்த மஞ்சள் தர்ப்பூசணி கிலோ ரூ.40 என விற்பனை செய்கிறோம். நாள் ஒன்றுக்கு 10 முதல் 30 கிலோ வரை விற்பனையாகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை