உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வங்கி கணக்கில் ரூ.2.23 லட்சம் திருட்டு

வங்கி கணக்கில் ரூ.2.23 லட்சம் திருட்டு

சிவகங்கை, : சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்தவர் ஜெபகுமார் 60. இவரது அலைபேசிக்கு ஜன.26ம் தேதி காலை 11:12 மணிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஜெபகுமார் குறுஞ்செய்தியில் வந்த லிங்கில் யுசர் ஐடி, பாஸ்வேர்டை பதிவு செய்துள்ளார், பிறகு ஒருவர் வங்கி மேலாளர் என பேசியுள்ளார். சிறிது நேரத்தில் ஜெபகுமார் வங்கி கணக்கில் இருந்து 7 தவணைகளில் ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 900 எடுக்கப்பட்டுள்ளது.ஜெபகுமார் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் மோசடி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ