மானாமதுரையில் விரட்டி கடிக்கும் வண்டுகள்
மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்று மேம்பாலத்தில் செல்பவர்களை வண்டுகள் விரட்டி கடிப்பதால் பயணிகள் பாதிக்கப் படுகின்றனர். மானாமதுரையில் வைகை ஆறு நகரின் குறுக்கே செல்கிறது. நகரின் இரு பகுதிகளை இணைக்கும் வகையில் அண்ணாதுரை சிலை எதிரே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக சிவகங்கைக்கும் நகரின் மற்ற பகுதிகளுக்கும் வாகனங்களில் பலர் செல்கின்றனர். மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஆங்காங்கே வண்டுகள் கூடு கட்டியுள்ளது. அவ்வப்போது பாலத்தில் செல்பவர்களை கடிப்பதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். நிரந்தரமாக பாலத்தின் கீழ்புறம் உள்ள கூடுகளை அகற்ற அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.