மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
13-Jan-2025
திருப்புவனம்: திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் முதல் சலங்கை என்ற பெயரில் 46 மாணவிகளுக்கு பரதநாட்டியம் கற்பித்து அதற்கான அரங்கேற்றம் மதுரை இசைக்கல்லூரி முதல்வர் சம்பூர்ணம் தலைமையில் நடந்தது. பள்ளி முதல்வர் ஜாஸ்மின் சாந்தி வரவேற்றார். கிருஷ்ணர் லீலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை நினைவுபடுத்தும் வண்ணம் மாணவியர்கள் பரதநாட்டியத்தில் அபிநயம் பிடித்தனர். பரதநாட்டிய குரு நட்டுவாங்கம் முத்துசெல்வம், மிருதங்கம் ஹரிதாஸ், வயலின் மதுசுதன், பின்பாட்டு ஆதீஷ்வரன்,மணிமாலா சம்பத் ஆகியோருக்கு பள்ளி முதல்வர் ஜாஸ்மின் சாந்தி பரிசுகளை வழங்கினார்.
13-Jan-2025