மேலும் செய்திகள்
மாட்டு வண்டி பந்தயம்
05-Oct-2025
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூரில் 'எம்மதமும் சம்மதமே' ஒருமைப்பாட்டுக் குழு மற்றும் கிராம மக்கள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டது. சங்கத் தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் என்.எம்.சுரேஷ், பொன்.குணசேகரன், சொக்கநாதன், மாணிக்கம் முன்னிலை வகித்தனர். முதல் பரிசை வல்லநாயக்கன்பட்டி லக்சன் சித்தார்த், 2ம் பரிசை திருச்சி சந்தோஷ், 3ம் பரிசு சருகுவலையபட்டி பிரதீப், 4ம் பரிசை புதுப்பட்டி மோனிஷ் பெற்றனர். துணைத் தலைவர் ஆத்மநாதன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.
05-Oct-2025