உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நகராட்சியை கண்டித்து  பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

நகராட்சியை கண்டித்து  பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் பொது மயானம் அருகே கிராவல் மண் அள்ளப்படுவதை கண்டித்தும் சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நகர் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிவகங்கை மானாமதுரை ரோட்டில் உள்ளது தெற்கு மயானம். இதன் பின் பகுதியில் நகராட்சி சார்பில் குப்பையை கொட்டி சேமித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஊரணி இருந்தது. குப்பை கொட்டப்பட்டதால் ஊரணி இருந்ததற்கான அடையாளமே தற்போது இல்லாமல் உள்ளது.இந்த பகுதியில் இரவில் கிராவல் மண் வெட்டி எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு விடுமுறை நாளில் கிராவல் மண் வெட்டி கடத்தியதாக கூறி பா.ஜ.,வினர் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர் தலைவர் உதயா தலைமை வகித்தார். பொது செயலாளர்கள் பாலா, சதீஸ், பொருளாளர் கவுதம் உள்ளிட்ட நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பா.ஜ.,நகர் தலைவர் உதயா கூறுகையில், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட மயானத்தில் நேற்று முன்தினம் குப்பை கொட்டுவதற்காக குழி தோண்டுவதாக கூறி கொண்டு சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளி கடத்தியுள்ளனர். இது குறித்து புகார் அளிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு தடுத்து நிறுத்த முயற்சி செய்தால் எந்த அதிகாரியும் போனை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும், சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தியவர்கள் மீதும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.கமிஷனர் கிருஷ்ணராம் கூறுகையில், இது குறித்து எந்த தகவலும் எனக்கு தெரியாது. புகார் ஏதும் இல்லை. நான் விடுமுறையில் இருந்து நேற்று தான் வந்தேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி