ரத்த சேகரிப்பு முகாம்
தேவகோட்டை; தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி ரத்த வங்கி மருத்துவமனை மற்றும் திருவேகம்புத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்தம் சேகரிப்பு முகாமை நடத்தினர். கல்லுாரி செயலாளர் செபாஸ்டியன், முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் துவக்கி வைத்தனர். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சித்து ஹரி, வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார், நடமாடும் மருத்துவ குழு டாக்டர் பால் விக்னேஷ், சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், ஆலோசகர் முருகன் பங்கேற்றனர். 56 தன்னார்வலர்கள் ரத்தம் வழங்கினர்.