உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊருணியில் மாயமானவர் உடல் மீட்பு

ஊருணியில் மாயமானவர் உடல் மீட்பு

இளையான்குடி: இளையான்குடியைச் சேர்ந்த இக்பால் மகன் சாகுல் ஹமீது 35, இவர் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகிலுள்ள சமுத்திர ஊருணியில் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு குளிக்க சென்றுள்ளார். ஊருணியின் மையப்பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கியதை ஊருணியின் எதிர்புறம் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இளையான்குடி, மானாமதுரை தீயணைப்பு நிலைய வீரர்கள் ஊருணியில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு வரை உடல் மீட்கப்படாத நிலையில் நேற்று காலை கடலில்முத்து குளிப்பவர்கள் மற்றும் பல்வேறு உபகரணங்களை கொண்டு மீண்டும் தேடினர்.இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு சாகுல்ஹமீது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை