உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலை உறுதித் திட்டத்தில் எல்லை பிரச்னை

வேலை உறுதித் திட்டத்தில் எல்லை பிரச்னை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வேலை உறுதித் திட்டப் பணியில் எல்லை பிரச்னை காரணமாக தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கண்மாய், வரத்து கால்வாய் உள்ளிட்டவை தூர்வாரப்படுகின்றன. மேலும் வேண்டுகோள் அடிப்படையில் தனி நபர்களின் விவசாய நிலங்களும் சீரமைத்து தரப்படுகிறது.இதற்காக அத்திட்ட தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் சில இடங்களில் கால்வாய், வரப்பு சீரமைப்பு பணியின் போது தனிநபர்களின் எல்லை பிரச்னை வருகிறது. அதனால் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி இன்றி பணி செய்யக்கூடாது என எதிர்ப்பு வருகிறது.எதிர்ப்பு தெரிவிப்போருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறுகிறது. எனவே அதிகாரிகள் வேலை உறுதி திட்டப் பணிகளை முறையாக ஆய்வு செய்து பிரச்னை இல்லாத பகுதியில் தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ