வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
காரைக்குடி:காரைக்குடி அருகே அமராவதிபுதுார் சிவ ராமன் மனைவி செல்வி 40. இவர் ஆராவயல் ரோட்டில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் செல்வி தனது குழந்தை களை பள்ளி, கல் லுாரிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு சென்றார். கல்லுாரிக்கு சென்ற செல்வி யின் மூத்த மகள் அட்சயா கல்லுாரி முடிந்து வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. சந்தேகம் அடைந் த அட்சயா அம்மா செல்விக்கு போனில் அழைத்து கூறினார். செல்வி வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவும் கம்பியால் உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது உறுதியானது. செல்வி சோமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.