மேலும் செய்திகள்
இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்
24-Mar-2025
சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் பெரிய மாட்டுப்பிரிவில் 10 ஜோடி மாடுகளும், இரு சுற்றுகளாக நடந்த சிறிய மாட்டு பிரிவில் தலா 10 ஜோடி மாடுகள் என 30 ஜோடி மாடுகள் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து பங்கேற்றன. பெரியமாட்டு பிரிவுக்கு 8 கிலோ மீட்டர் துாரமும், சிறிய மாட்டு பிரிவிற்கு 6 கிலோமீட்டர் துாரமும் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
24-Mar-2025