மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி: காரைக்குடி கழனிவாசலில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.காரைக்குடி கழனிவாசல் ஐயுளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 35 வது ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு மாடு என இரு பிரிவுகளாக போட்டி நடந்தது. நடுமாட்டில் 17 ஜோடிகளும் பூஞ்சிட்டு மாட்டில் 32 ஜோடிகள் என 49 வண்டிகள் பங்கேற்றன. ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை மதுரை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.