மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை: காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து 16 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. கொல்லங்குடி - காளையார்கோவில் ரோட்டில் நடந்த இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் போட்டி போட்டு ஒன்றை ஒன்று முந்தி சென்றன. முதல் 4 இடத்தை பிடித்த மாட்டு வண்டிகளுக்கும் அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.