உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்

ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை ஜல்லிக்கட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இங்குள்ள ஐயனார் கோயில் வைகாசி வழிபாட்டை முன்னிட்டு கிராமத்தார்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்தது.500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 237 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதலில் கிராம கோயில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதை தொடர்ந்து மற்ற மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டன. இம்முறை மாடுகளுக்கு விழா கமிட்டி சார்பில் எந்த பரிசும் அறிவிக்கப்படவில்லை. வேட்டி துண்டு மட்டும் வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். தாசில்தார் பரிமளா ஜல்லிக்கட்டை கண்காணித்தார். ஏ.டி.எஸ்.பி., பிரான்சிஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் நபிஸா பானு தலைமையில் பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் முகாமிட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி