மேலும் செய்திகள்
வீடு புகுந்து நகை திருட்டு; போலீஸ் விசாரணை
29-Oct-2024
காரைக்குடி: செட்டிநாடு அருகே உள்ள தேவரிப்பட்டியை சேர்ந்தவர் முத்து கருப்பன் 54. அழகப்பா பல்கலை.,யில் தோட்ட வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு சென்ற நிலையில், இவரது மனைவி சிட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார்.இருவரும் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து வீட்டில் பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல் முத்துப் கருப்பனின் எதிரே உள்ள சாத்தப்பன் என்பவரது வீட்டிலும் வீட்டை உடைத்து நகை பணத்தை திருடர்கள் திருடி சென்றுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29-Oct-2024