ரயில்வே ஸ்டேஷன் அருகே வீணாக ஓடும் காவிரி குடிநீர்
காரைக்குடி : கல்லல் ரயில்வே ஸ்டேஷன் அருகே, காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் சேதமடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 2009ஆம் ஆண்டு ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டது.குடிநீர் திட்ட குழாய் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி கல்லல் வழியாக ராமநாதபுரம் செல்கிறது.கல்லல் ரயில்வே ஸ்டேஷன் அருகே பல நாட்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தினமும் தண்ணீர் வீணாகி சாலையில் ஓடுகிறது.