நுாற்றாண்டு கண்ட அரசுப் பள்ளியில் விழா
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம்திருக்களாப்பட்டியில் நுாற்றாண்டு கண்ட தி.ஊ. துவக்கப்பள்ளிக்கு கிராமத்தினர் விழா எடுத்து கொண்டாடினர். திருக்களாப்பட்டியில் சுதந்திரம் அடையும் முன்பாகவே 1924ல் மாவட்ட ஜில்லா போர்டால் இப்பள்ளி துவக்கப்பட்டுஉள்ளது. இப்பள்ளிக்கு பல கட்டடங்கள் மாறி விட்டன. தற்போது பள்ளி துவங்கி நுாறு ஆண்டுகளாகியதை அடுத்து கிராமத்தினர்,முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மேலாண்மைக்குழுவினர், பெற்றோர்கள் என்று அனைவரும் சேர்ந்து பள்ளிக்கு விழா எடுத்தனர். மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார்தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மேகலா வரவேற்றார். ஆசிரியர் காளிராஜ் ஆண்டறிக்கையை வாசித்தார். தொடர்ந்து பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜெயப்பிரகாசம் வழங்கிய 'தொடு திரை வகுப்பு' துவக்கப்பட்டது. பள்ளியின் நூற்றாண்டு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். டி.இ.ஓ., செந்தில்குமார் நூற்றாண்டு மலரை வெளியிட முன்னாள் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாசம், வட்டார கல்வி அலுவலர் குமார், முன்னாள் மாணவர்கள் பேசினர்.