உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பள்ளியில் நுாற்றாண்டு திருவிழா

அரசு பள்ளியில் நுாற்றாண்டு திருவிழா

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலை துவக்கப்பள்ளியில் நுாற்றாண்டு கடந்த அரசுப்பள்ளிகளுக்கான நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.திட்ட இயக்குநர் வானதி தலைமை வகித்தார். மாவட்டக்கல்வி அலுவலர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துப்பாண்டியன் வரவேற்றார். தலைமையாசிரியர் கஸ்துாரி ஆண்டறிக்கை வாசித்தார்.ஆசிரியர் பொன்னழகு உறுதிமொழி வாசித்தார். அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசினர். உதவித்திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, வட்டாரக்கல்வி அலுவலர்கள் கலைச்செல்வி, இந்திராதேவி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேவுகமூர்த்தி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பாகம்பிரியாள் பங்கேற்றனர்.ஆசிரியர்கள் இந்திரா, நீலாவதி, கார்த்திகா, சூர்யா, தேன்மொழி, முன்னாள் மாணவிகள் அழகுசுந்தரி, அழகுமீனாள் கலை நிகழச்சி ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !