உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு

பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கல்லுாரணி கருப்பையா மனைவி வீரம்மாள் 65. இவர் சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் அரசு பஸ்சில் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு சென்றார். பஸ் காளையார்கோவில் அருகே சென்றபோது வீரம்மாளை இடித்துகொண்டு ஒரு பெண் காளையார்கோவில் இ.பி., ஸ்டாப்பில் இறங்கினார். அவர் இறங்கி சென்ற சிறிது நேரத்தில் தனது கழுத்தை பார்த்தபோது தான் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் திருடுபோய் இருந்தது தெரியவந்தது. வீரம்மாள் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி