உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சிவகங்கை: சிவகங்கை குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குழுவினரால் மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, திருப்புத்துார், சிவகங்கை, சிங்கம்புணரி, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டாய்வில் தேவகோட்டை, சிவகங்கை, சிங்கம்புணரி, திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் தலா 1 வளரிளம் பருவத் தொழிலாளர் கண்டறியப்பட்டனர். இவர்களை மீட்டு அவர்கள் உயர்நிலைக் கல்வி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவர்களை பணிக்கு அமர்த்திய கடை நிறுவன உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி