உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் வளாகத்தில் குடிமகன்கள் அட்டகாசம்

கோயில் வளாகத்தில் குடிமகன்கள் அட்டகாசம்

எஸ்.புதுார்: எஸ்.புதுாரில் கோயில் மற்றும் சமுதாயக்கூட வளாகத்தில் 'குடி'மகன் களின் அட்டகாசம் தொடர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எஸ்.புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் சமுதாயக்கூடம் மற்றும் சாம்பிராணி விநாயகர் கோயில் உள்ளது. முகூர்த்த காலங்களில் இக்கோயிலில் திருமணமும் மண் டபத்தில் பல்வேறு விழாக்களும் நடைபெறும். தினமும் காலை முதல் இரவு வரை கோயில், சமுதாயக்கூட வளாகத்தில் 'குடி'மகன்கள் அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடு கின்றனர். இதனால் அங்கு சுவாமி கும்பிட வரும் பக்தர்களும், மண் டபத்திற்கு வரும் பொதுமக்களும் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. இப்பகுதியில் நுாலகம், ஆர்.ஐ., அலுவலகங்களும் உள்ள நிலையில் 'குடி'மகன்களின் அட்டகாசம் தொடர்கிறது. எனவே இதை தடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை