உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் தொ.மு.ச., நிர்வாகிகள் மோதல்

காரைக்குடியில் தொ.மு.ச., நிர்வாகிகள் மோதல்

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில், அடிக்கடி போலீசார் நிறுத்தப்படுவதற்கு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலத்தின் கீழ் 13 பணிமனைகள் உள்ளன. தொ.மு.ச., தலைவர் முருகன் மற்றும் மண்டல பொதுச் செயலாளர் பச்சைமால் தரப்பினரிடையே தொடர்ந்து பிரச்னை நிலவி வருகிறது. ஜூலை 21ம் தேதி பரமக்குடியில் மண்டல பொதுச் செயலாளர் பச்சைமால் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, காரைக்குடி அரசு போக்குவரத்து மண்டல அலுவலக வளாகத்தில் முருகன் தலைமையில் போட்டி பொதுக்குழு கூட்டம் நடந்தது. தொ.மு.ச., அலுவலகத்தை தலைவர் முருகன் தரப்பினர் சேதப்படுத்தி பூட்டியதாக, பொதுச் செயலாளர் பச்சைமால் புகார் கூறி தனது ஆதரவாளர்களை மண்டல அலுவலகத்திற்கு வருமாறு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். நேற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார், அலுவலகத்திற்குள் நுழைபவர்களை விசாரணை செய்த பிறகே உள்ளே அனுப்பினர். இதனால் கோபமடைந்த அடைந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகி முனீஸ்வரன் தனது இருசக்கர வாகனத்தை நுழைவு வாயிலில் குறுக்கே நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொழிற்சங்க அலுவலகம் அனைத்தும் மண்டல அலுவலகம் வெளியே உள்ளது. தொ.மு.ச., அலுவலகம் மட்டும் எதற்காக உள்ளே உள்ளது. அலுவலகம் உள்ளே இருப்பதால் தான் அடிக்கடி சண்டை வருகிறது. போலீஸ் வருகிறது. இதனால் பணியாளர்கள் வேலைக்கு செல்வதில் சிக்கல் நிலவுகிறது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ