உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அனைத்து பள்ளிகளிலும் காலநிலை கல்வி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அனைத்து பள்ளிகளிலும் காலநிலை கல்வி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வி குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை நந்தம்பாக்கத்தில் காலநிலை உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த மாநாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காலநிலை மாற்த்தை எதிர்கொள்ளும் வகையில் நம்மை தகவமைத்துக் கொள்ளும் முயற்சியாக மாநாடு நடக்கிறது. வயநாடு நிலச்சரிவு, திருவண்ணாமலை மண்சரிவுக்கும் காலநிலை மாற்றத்தையே காரணமாக சொல்ல வேண்டும். காலநிலை மாற்றத்தை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

காலநிலை கொள்கை

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். உலக நாடுகள் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை சந்தித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தை கல்வி மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும். காலநிலைக்கு என கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால் ரூ.4 லட்சம் நிவாரணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

அக்கறை

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவை எதிர்கொள்ள மக்கள் அது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெப்ப நிலையை எதிர்கொள்ள ஓ.ஆர்.எஸ்., கரைசல், தண்ணீர்ப் பந்தல் அமைக்க மாநில பேரிடர் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கை வளங்களைப் பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக நாம் மாற வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Venkateswaran Rajaram
பிப் 04, 2025 19:16

இருக்கிற கல்வியே தரம் கெட்டு இருக்கு. முதல்ல பள்ளிக்கூட கட்டிடங்களை ஊழலே பண்ணாமல் தரமாக கட்டி காண்பிங்க ... நீங்க செய்றது எல்லாமே பித்தலாட்டம். இந்த லட்சணத்தில்...அனைத்து பள்ளிகளிலும் காலநிலை கல்வி... இருக்கிற மருத்துவமனைகளும் தரம் கேட்டு இருக்கு...இருக்கிற சாலைகளும் தரம் கெட்டு இருக்கு...இருக்கிற ஓடைகளும் தரம் கெட்டு இருக்கு...இருக்கிற அரசு கட்டிடங்களும் தரம் கெட்டு இருக்கு...


Siva Subramaniam
பிப் 04, 2025 18:11

இவர்கள் நடத்துகின்ற பள்ளிகளில் ஹிந்தி சொல்லிகொடுப்பதைப்போல எல்லா பள்ளிகளிலும் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்வார்களா?


என்றும் இந்தியன்
பிப் 04, 2025 16:11

திருட்டு திராவிட அறிவிலி மடியில் அரசின் திராவிட டிக்ஷனரி கல்வி என்றால் கலவி என்று உண்மையான டிக்ஷனரியின் அர்த்தம் காலநிலை கலவி அதாவது ஒவ்வொரு காலத்திலும் எப்படி


Venkateswaran Rajaram
பிப் 04, 2025 15:07

டேய் திருடன்களா முதல்ல பள்ளிக்கூட கட்டிடங்களை ஊழலே பண்ணாமல் தரமாக கட்டி காண்பிங்கடா ... நீங்க செய்றது எல்லாமே பித்தலாட்டம் ஊழல் வழிப்பறி திருட்டு உலகத்தில் உள்ள எல்லா பித்தலாட்ட வேலைகளையும் செய்து விட்டு கல்வி மட்டும் எங்களுக்கு கற்பிப்பது.. இந்த காலநிலை மாற்ற இயக்கமுன்னு ஒன்னு ஆரம்பிச்சிட்டு அதுக்கு ஒரு 500 கோடி ஒதுக்கி விட்டுட்டு அந்த 500 கோடி ல 499.9 கோடி ஆட்டைய போட்டுட்டு. ஓடிப் போயிருவீங்க..


ஆரூர் ரங்
பிப் 04, 2025 14:40

நீங்க ஒரு ராகுகாலம். ஓட்டுப் போட்ட மக்களுக்கு கஷ்டகாலம். இதுதாண்டா காலநிலை.


Kasimani Baskaran
பிப் 04, 2025 14:28

மந்திரி சபையில் உள்ள பாதிப்பேருக்கு தமிழே தரிகின்றதாம் போடுகிறது. பிள்ளைகளுக்கு பத்தாவது வகுப்பு வரும்பொழுது கூட கோர்வையாக எழுதத்தெரியவில்லை. எட்டாம் வகுப்பில் பாதிப்பேருக்கு மேல் சரளமாக வாசிக்கக்கூட தெரியவில்லை. இதில் பருவநிலை மாற்றம் பற்றி சொல்லிக்கொடுக்கப்போகிறார்களாம்...


guna
பிப் 04, 2025 13:58

இந்த பாட திட்டத்தில் கனிம வள கொள்ளை சேருமா??...அதுவும் சுற்று சூழல் தானே மன்னா?


Venkateswaran Rajaram
பிப் 04, 2025 15:09

கனிமவளக் கொள்ளை எல்லாம் நமக்கு கற்றுத்தர மாட்டார்கள் அது அவர்கள் சார்ந்த துறை அவர்களுடைய வாரிசுகளுக்கு மட்டும் கற்றுக் கொடுப்பார்கள் நாம் மூடிக்கொண்டு அவர்கள் கற்பிப்பதை நாம் பயில வேண்டும்


Sakshi
பிப் 04, 2025 13:53

நீ என்ன புதுசா கத விடற


ஈசன்
பிப் 04, 2025 13:37

வரவேற்க பட வேண்டிய விஷயம். பள்ளியில் பயிலும் இன்றைய மாணவர்கள்தான் எதிர்கால சுற்று சுழல் பாதிப்பை எதிற்கொள்ளவிருக்கும் சமூகம். எனவே இத்தகைய கல்வி கட்டாயம் தேவை.


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 04, 2025 12:52

முதல்ல உங்க நேரடி பார்வைல இருக்கிற சட்டம் ஒழுங்கை ஒரு கடை நிலை உறுப்பினரிடம் குடுங்க. அவனாவுது ஒரு தெருவையாச்சும் பாதுகாப்பா வைப்பான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை