மேலும் செய்திகள்
பாலம் பணி துவங்காததால் பொதுமக்கள் அதிருப்தி
06-Nov-2025
காரைக்குடி: காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி அசோக் நகரில் குடிநீர் போர்வெல்லை சீரமைக்காமல் மொத்தமாக மூடப்பட்டதால் மக்கள் குடிநீருக்கு சிரமப்படு கின்றனர். காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி தற்போது காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அசோக் நகர் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த போர்வெல் மூலம் அசோக் நகர், மன்னர்நகர், காளையப்பா நகர் உட்பட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த போர்வெல் பழுதடைந்ததாக கூறி ஒரு மாதம் முன்பு பராமரிப்பு பணி துவக்கப்பட்டது. பணி முழுமையாக நடைபெறவில்லை. போர்வெல் குழாய்கள் உள்ளே விழுந்ததாக கூறி பணிகள் கைவிடப்பட்டது. போர்வெல் சரி செய்யப்படாமல் சிமென்ட் தொட்டிகள் மூலம் போர்வெல் மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஒரு மாதத்திற்கு முன்பு போர்வெல் சேதமடைந்ததாக தெரிவித்தனர். ஓரிரு நாட்களில் சரி செய்வதாக கூறியவர்கள் போர்வெல் குழாய் உள்ளே விழுந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து சிமென்ட் தொட்டிகள் மூலம் போர்வெல்லை மூடிவிட்டு சென்றுவிட்டனர். மக்கள் புகார் அளித்ததால் காவிரி கூட்டு குடிநீர் திட்ட மூலம் ஓரிரு நாட்கள் தண்ணீர் வந்தது. தற்போது முறையாக வரவில்லை. இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
06-Nov-2025