உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மூடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை திறப்பு

மூடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை திறப்பு

காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வே குடியிருப்பு செல்வதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. லட்சுமி நகர், பொன் நகர், இலுப்பக்குடி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் இப்பாதையை பயன்படுத்தி வந்தனர். கனமழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதை மழை நீரால் நிரம்பியது. தண்ணீர் வெளியேற்றப்பட்டு சுரங்கப்பாதை மூடப்பட்டது.பல வாரங்களாகியும் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வரவில்லை. மக்கள் அதிக துாரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து தற்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ