உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதல்வர் கோப்பை விளையாட்டு  முன்பதிவு ஆக.20 வரை நீட்டிப்பு  

முதல்வர் கோப்பை விளையாட்டு  முன்பதிவு ஆக.20 வரை நீட்டிப்பு  

சிவகங்கை: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஆக.,20 வரை முன்பதிவு செய்யலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி யில் பங்கேற்க வீரர்கள் முன்பதிவு ஜூலை 14 முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க இது வரை மாநில அளவில் 10 லட்சம் வீரர்கள் (https://cmtrophy.sdat.tn.gov.in) முன்பதிவு செய்துள்ளனர். இதற்கான கடைசி நாள் ஆக.,16 வரை இருந்தது. முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்க வீரர்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால், முன்பதிவு செய்வதற்கான இறுதி நாளாக ஆக.,20 இரவு 8:00 மணி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல்வர் கோப்பை போட்டி களில் விளையாட வீரர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ