உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூட்டுறவு ஊழியர்கள் விடுப்பு போராட்டம்

கூட்டுறவு ஊழியர்கள் விடுப்பு போராட்டம்

சிவகங்கை: தமிழக கூட்டுறவு துறை பதிவாளரை மாற்றம் செய்யக்கோரி சிவகங்கையில் கூட்டுறவு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சூப்பர் மார்க்கெட் மூலம் பொருட்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைக்கு பொருட்களை விற்பனை செய்யுமாறு கூட்டுறவு துறை பதிவாளர் லதா உத்தரவிட்டுள்ளார். இதனால் ரேஷன் கடைகளில் பொருட்களின் விலை உயரக்கூடும்என்று கூறி கூட்டுறவு துறையை பாதிக்க செய்யும் பதிவாளரை பணியிடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தினர் அந்தந்த இணை பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று இரண்டாம் கட்டமாக சிவகங்கை, காரைக்குடியில் உள்ள இணை பதிவாளர், துணை பதிவாளர் அலுவலகங்களில் கண்காணிப்பாளர் முதல் உதவியாளர் வரை பணிபுரியும் 72 பேரில் 50 பேர் வரை நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் வினோத்ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கிங்ஸ்டன் டேவிட் போராட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார். ////


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை