மேலும் செய்திகள்
பத்ம விருதுக்கு கருத்துரு கலெக்டர் அறிவிப்பு
10-May-2025
சிவகங்கை: குடியரசு தினத்தன்று அரசால் வழங்கப்படும் பத்ம விருதுக்கு ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பன்முக திறனுக்கான பத்ம விருது, குடியரசு தினத்தன்று வழங்கப்படும். 2026 ம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவ துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு 2026 ஜன., 26 அன்று குடியரசு தினவிழாவில் பத்ம விருது வழங்கப்படும். இந்த விருது பெற விரும்பும் பன்முக திறன் படைத்தோர் ஜூன் 10ம் தேதிக்குள் https://awards.gov.in- இணையதளத்தில் விண்ணப்பித்து அந்த விபரத்தை மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்றார்.
10-May-2025