உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குழந்தை திருமணம் தவிர்ப்பு சாலுாரில் கலெக்டர் பேச்சு 

குழந்தை திருமணம் தவிர்ப்பு சாலுாரில் கலெக்டர் பேச்சு 

சிவகங்கை: குழந்தை தொழிலாளர், திருமணம் தவிர்க்க வேண்டும் என சிவகங்கை அருகே சாலுாரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் ஆஷா அஜித் பேசினார்.முகாமிற்கு கலெக்டர் தலைமை வகித்தார். சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி முன்னிலை வகித்தனர்.மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் சிவராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், ஊராட்சி தலைவர் நாச்சம்மாள் பங்கேற்றனர். 139 பயனாளிகளுக்கு கலெக்டர் ரூ.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

குழந்தை திருமணம் தவிர்க்கவும்

கலெக்டர் பேசியதாவது: சாலுார் பகுதியில் காய்கறி, வாழை, கரும்பு சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இந்த விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் அளிக்கும். கிராமங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் குழந்தை திருமணம் நடக்காதவாறும், குழந்தைகளை பணிக்கு அனுப்பாமல் பார்த்து கொள்ள வேண்டும். கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெற்று, நல்ல நிலைக்கு வர வேண்டும். அதே போன்று இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறாமல், குடும்ப கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், என்றார்.முன்னதாக மேல சாலுார் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறை, அங்கன்வாடி மையம், ரேஷன் கடைகளில் வினியோகிக்க போதுமான பொருட்கள் இருப்பு உள்ளதா என ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ