கல்லுாரியில் நேர்காணல்
திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மெக்கானிக்கல் துறை, மின்னியல் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை மற்றும் மெக்கட்ரானிக்ஸ் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடந்தது.கல்லுாரி தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் கே.சசிக்குமார் முன்னிலை வகித்தார்.ராயல் என்பீல்டு அகாடமி பார் டெக்னிக்கல் ஸ்கில்ஸ் நிறுவன மனித வள மேம்பாடு அலுவலர் கே.விக்டர் தேவ் வளாகத் தேர்வு மற்றும் நேர்காணலை நடத்தினார். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் பி.வைத்தியநாதன் நன்றி கூறினார்.