உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளைகளுக்கு போட்டி

காளைகளுக்கு போட்டி

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் அரையிட்டானேந்தல் கிராமத்தில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கான போட்டி நடந்தது.மணமேல்பட்டி ஊராட்சி அரையிட்டானேந்தல் கிராமத்தில் நடந்த இப்போட்டிக்கு முன்னாள் ஊராட்சிதலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து வந்த மஞ்சுவிரட்டு காளைகளை மேளதாளத்துடன், ஆரத்தி எடுத்து, வேட்டி, துண்டு, மாலை கொடுத்து பெண்கள் வரவேற்றனர். பங்கேற்ற காளைகளில் சிறப்பான 14 காளைகள் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் காளைகளின் பெயர்களை எழுதி குலுக்கல் முறையில் காளைகளின் உரிமையாளர்களே சீட்டு எடுத்து தேர்வு செய்தனர்.முதல் பரிசு சேதுராமன், இரண்டாம் பரிசு சுண்ணாம்பிருப்பு செந்தில் குமார், மூன்றாம் பரிசு தென்கரை, நான்காம் பரிசு அஸ்வின் குமார் பெற்றனர். நெடுமரம் ஊராட்சி மாணிக்கவாசகம், வக்கீல் கணேசன் பங்கேற்றனர். ஏற்பாட்டினை கரு.மணிவண்ணன் மற்றும் மணமேல்பட்டி, அரையிட்டான் ஏந்தல், ஜெயமங்கலம் இளைஞர்கள் மற்றும் கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை