உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பள்ளியில் மாணவரை  அடித்ததாக கலெக்டரிடம் புகார்  சி.இ.ஓ., விசாரணைக்கு பரிந்துரை 

அரசு பள்ளியில் மாணவரை  அடித்ததாக கலெக்டரிடம் புகார்  சி.இ.ஓ., விசாரணைக்கு பரிந்துரை 

சிவகங்கை: பூலாங்குறிச்சி அரசு தியாகராஜர் மேல்நிலை பள்ளி மாணவரை பிரம்பால் அடித்ததாக, பெற்றோர் சிவகங்கை கலெக்டர் பொற்கொடியிடம் புகார் அளித்தனர். திருப்புத்துார் அருகே பூலாங்குறிச்சியை சேர்ந்த மாணவர் 13. இவர் அங்குள்ள அரசு தியாகராஜர் மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். இம்மாணவரை ஆசிரியைகள் இருவர், பிரம்பால் அடித்து காயப்படுத்தியதாக கூறி, நேற்று மாணவருடன் வந்த பெற்றோர் சிவகங்கை கலெக்டர் பொற்கொடியிடம் புகார் அளித்தார். போலீசில் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. என் குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைத்திருப்பதால், பள்ளியில் என் மகனை ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்துகின்றனர் என புகாரில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை பெற்ற கலெக்டர் பொற்கொடி, சிவகங்கை முதன்மை கல்வி அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இது குறித்து பெற்றோர் கூறியதாவது: கிராமத்தில் என் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். கிராம பெரியவர்களின் துாண்டுதலின் பேரில் தான் பள்ளியில் ஆசிரியர்கள் என் மகனை அடிக்கின்றனர். ஏற்கனவே எனது மூத்த மகனை அடித்ததால் அவர், படிப்பை தொடர முடியாமல் போய்விட்டது. என் இரண்டாவது மகன் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: எந்த மாணவரையும் நாங்கள் பிரம்பால் அடிப்பதே இல்லை. அந்த மாணவர் வீட்டு பாடங்களை எழுதியும், படிக்காமல் பள்ளிக்கு வருவார். இதற்காக அவரை கண்டிப்பதுண்டு. கிராம பிரச்னையில் மாணவரின் பெற்றோர் கிராம கல்வி குழு சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மீது பொய்யான புகாரை தெரிவிக்கின்றார், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை