உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மேலப்பசலை மேம்பாலத்தில் மழை நீர் அரிப்பை தடுக்க கான்கிரீட் அமைப்பு

மேலப்பசலை மேம்பாலத்தில் மழை நீர் அரிப்பை தடுக்க கான்கிரீட் அமைப்பு

மானாமதுரை : மானாமதுரை அருகே மேலப்பசலை மேம்பாலத்தின் ஓரங்களில் மழை நீரால் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க ரூ.20 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு செல்லும் சாலை இருவழிச்சாலையாக இருந்தபோது மானாமதுரை மேலப்பசலை அருகே இருந்த ரயில்வே மேம்பாலத்தின் வழியாக போக்குவரத்து நடைபெற்று வந்தது. 7 வருடங்களுக்கு முன்பு இந்த சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படும் போது மேலப்பசலையில் இருந்த ரயில்வே மேம்பாலத்தை மராமத்து மட்டும் செய்து ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக சென்றது. அதேபோன்று மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வாகனங்களுக்காக பழைய மேம்பாலத்திற்கு அருகில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு அதில் சென்று வருகிறது.ஆரம்பத்தில் இருந்த பழைய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு நீண்ட வருடங்கள் ஆன நிலையில் இரு புறங்களிலும் மழை நேரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு வருவதால் பாலத்தின் உறுதித் தன்மை இழந்து வருவதாக வாகன ஓட்டிகள் கடந்த சில வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது.இதனைத் தொடர்ந்து தற்போது பாலத்தின் இரு புறங்களிலும் ரூ.20 லட்சம் செலவில் கான்கிரீட் கலவை போடப்பட்டு மழை நீரால் மண் அரிப்பு ஏற்படாதவாறு நீரை கொண்டு செல்வதற்கான பணி நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை