உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காது கேளாதோர் உதவி தொகை ரூ.6000 ஆக்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

காது கேளாதோர் உதவி தொகை ரூ.6000 ஆக்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

திருப்புத்தூர் : காதுகேளாதோர் உதவி தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என திருப்புத்துாரில் நடந்த காதுகேளாதோர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர். மாநாட்டிற்கு மாவட்டதலைவர் தீபக் செல்வக்குமார் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் கோபால்ராஜன் வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், மாநில தலைவர் பழனிச்சாமி, பொது செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தீர்மானம்: காதுகோளாதோருக்கான மாத உதவி தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும். அரசு வேலையில் 1 சதவீதம் இட ஒதுக்கீடு உட்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றினர். பொது செயலாளர் காதர் சுல்தான் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி