உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கனவு இல்ல திட்டத்திற்கு கூட்டுறவு வங்கியில் கடன் மறுப்பு

கனவு இல்ல திட்டத்திற்கு கூட்டுறவு வங்கியில் கடன் மறுப்பு

இளையான்குடி: இளையான்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.இளையான்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 20க்கும் மேற்பட்டோருக்கு கனவு இல்ல திட்டத்திற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் 350 சதுர அடியில் இருந்து 400 சதுர அடிக்குள் வீடு கட்ட வேண்டும். அதற்காக அரசிடமிருந்து ரூ.3.50 லட்சம் 4 தவணைகளாக பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பயனாளிகள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என கனவு இல்ல திட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனாளிகள் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் கேட்டால் அவர்கள் கடன் வழங்க மறுக்கின்றனர். மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி கூறியதாவது:கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்காக பயனாளிகளுக்கு கடன் வழங்க கோரி எங்களது மேலதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை