உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கூட்டுறவு வங்கி ஓய்வூதியர் பணபலன் ரூ.6.33 கோடி வரை இழுத்தடிப்பு: கூடுதல் பதிவாளர் விசாரணை

 கூட்டுறவு வங்கி ஓய்வூதியர் பணபலன் ரூ.6.33 கோடி வரை இழுத்தடிப்பு: கூடுதல் பதிவாளர் விசாரணை

சிவகங்கை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணபலன்கள் ரூ.6.33 கோடி வரை வழங்காமல் இழுத்தடிப்பது தொடர்பாக கூடுதல் பதிவாளர் முத்துக்குமாரசுவாமி சிவகங்கையில் விசாரணை நடத்தினார். சிவகங்கையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 வங்கி கிளைகள் செயல்படுகின்றன. இங்கு பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்தோர் 9 பேரின் பணபலன் தொகை ரூ.48 லட்சத்தை, அடுத்தவர் வங்கி கடன் கணக்கில் வரவு வைத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 50 க்கும் மேற்பட்ட அலுவலர், ஊழியர்களின் பணப்பலன்கள் ரூ.6.33 கோடி வரை விடு விக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் பதிவாளருக்கு புகார் அனுப்பினர். அவரது உத்தரவுபடி கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் முத்துக்குமாரசுவாமி நேற்று சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியில் விசாரணையை துவக்கியுள்ளார். ஓய்வு பெற்ற அனைத்து அலுவலர், ஊழியர்களை நேரடியாக வரவழைத்து விசாரித்து வருகிறார். ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை அறிக்கை பதிவாளரிடம் ஒப்படைக்கப்படும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை