உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோர்ட் நடவடிக்கை: பார்வையிட்ட மாணவிகள்

கோர்ட் நடவடிக்கை: பார்வையிட்ட மாணவிகள்

சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நீதிமன்ற செயல்பாடுகளை பார்வையிட்டனர். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் சட்ட கல்வி கிளப் துவங்கப்பட்டு ஒவ்வொரு பள்ளி, கல்லுாரிகளிலும் 25 மாணவர்கள் உறுப் பினர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா தலைமையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்ற செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் நீதிமன்ற பணிகளை பார்வையிட ஏற்பாடு செய்யப்படுகிறது. நேற்று சிவகங்கை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 25 பேர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மாவட்ட நீதிமன்றம், சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை பார்வையிட வைத்தனர். சட்டப்பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் பாடுகள் குறித்து செய லாளர் சார்பு நீதிபதி ராதிகா மற்றும் வழக்கறிஞர் தனபாலன் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை