உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவபுரிபட்டி பாலத்தில் விரிசல்

சிவபுரிபட்டி பாலத்தில் விரிசல்

சிங்கம்புணரி,: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி பாலத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.2005ம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிவபுரிபட்டி தரைப்பாலம் மூழ்கி அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். 2006ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு புதிய பாலம் கட்டப்பட்டது. சில ஆண்டுகளில் பாலத்தில் விரிசல் ஏற்படத் துவங்கியது.அதை அதிகாரிகள் தார், சிமென்ட் கலவை மூலம் பூசி சரி செய்தனர். இந்நிலையில் கடந்தாண்டு அக்., மாதம் பாலத்தின் நடுவில் வெடிப்பு ஏற்பட்டு கான்கிரீட் தளம் உடைந்தது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சிமென்ட், தார் மூலம் வெடிப்பை சரி செய்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் இப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டு மேல் தளம் உடைந்து காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி