அரசு மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன் எடுக்க நெரிசல்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன் எடுக்க நோயாளிகள் நீண்ட வரிசை யில் காத்திருப்பதால், கூடுதல் இயந்திரங்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உள் உடலுருப்புகள், எலும்புகளின் ரத்த நாளம் போன்றவற்றினை துல்லியமாக அறிய சி.டி., ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்கின்றனர். தினமும் 80 முதல் 100 நோயாளிகள் வரை எடுக்கின்றனர். வாரத்தின் முதல் நாளில் 150 நோயாளிகள் வரை ஸ்கேன் எடுக்க வருகின்ற னர். முதல்வர் காப்பீடு திட்டத்தில் இலவசமாகவும், காப்பீடு அட்டை இல்லாதோருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக் கின்றனர். நேற்று சி.டி., ஸ்கேன் எடுக்க அதிகளவில் வெளிநோயாளிகள் வந்திருந்ததால், உள்நோயாளிகள் உரிய நேரத்தில் ஸ்கேன் எடுக்க முடியாமல் திணறி னர். எனவே நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதலாக சி.டி., ஸ்கேன் வசதியை ஏற்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் கூறியதாவது: புதிய தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக சி.டி., ஸ்கேன் பொருத்தப்பட உள்ளது. அதே போன்று செப்.,ல் புதிதாக எம்.ஆர்.ஐ., ஸ்கேனும் வந்துவிடும். இதனால் நோயாளி களுக்கு சிரமம் குறையும், என்றனர்.