உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கருவேல மரங்கள் வெட்டி அகற்றம்

கருவேல மரங்கள் வெட்டி அகற்றம்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே கானுார் கால்வாய் கரையில் வளர்ந்திருந்த கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. திருப்புவனம் புதுார் வைகை ஆற்றினுள் கானுார், பழையனுார் உள்ளிட்ட கண்மாய் பாசனத்திற்காக 40 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் 410 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை மூலம் கானுார் மற்றும் பழையனுார் கண்மாய்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கால்வாய்களை துார்வாரும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கானுார் கால்வாய் கரையில் 20 ஆண்டுகளாக கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. அவை 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்டப்பட இல்லை. புதிய படுகை அணை கட்டப்பட்டுள்ள நிலையில் சிலர் கரையில் இருந்த கருவேல மரங்களை வெட்டி லாரிகளில் எடுத்து செல் கின்றனர். கால்வாய் கரை பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்றாலும் வருவாய்த்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு அதன் பிறகு தான் மரங்களை வெட்ட முடியும். ஆனால் எந்த வித உத்தரவும் இன்றி தன்னிச்சையாக சிலர் மரங்களை வெட்டி விற்பனை செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை