மேலும் செய்திகள்
புதர்மண்டிய கல்குளம் கண்மாய்
02-Nov-2024
சிவகங்கை; தமறாக்கி அருகே கொத்தங்குளம் கண்மாய்க்கு செல்லும் உப்பாற்று கால்வாய் உடைப்பால் மழை நீர் விரயமாகிறது.சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் தமறாக்கி வடக்கில் கொத்தங்குளம் கண்மாய் உள்ளது. மழை காலங்களில் மதுரை மாவட்டம், திருவாதவூரில் இருந்து உப்பாற்றில் வரும் வெள்ள நீர் கொத்தங்குளம், ஆலங்குடி, வெளவெத்தான் கண்மாய்களை நிரப்பி செல்லும். இதன் மூலம் இக்கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நில விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள உப்பாறு ஆற்றில் இருந்து கொத்தங்குளம் கண்மாய்க்கு மழை நீர் செல்லும் வரத்து கால்வாய் உடைந்து, மழை நீர் கண்மாய்க்கு செல்லாமல் அருகில் உள்ள பிற கண்மாய்களுக்கு செல்கிறது. இதனால், கொத்தங்குளம் கண்மாய் பாசனம் மூலம் நெல் நடவு செய்துள்ள 220 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இன்றி, விவசாயிகள் தவித்து வருகின்றனர்.நெல் நடவு செய்து 35 நாட்களே ஆன நிலையில் நெற்பயிரை காப்பாற்ற கொத்தங்குளம் கண்மாயில் தண்ணீரின்றி கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பொதுப்பணித்துறை நிர்வாகம் இக்கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயை சீரமைத்து தர வேண்டும். நெற்பயிரை காக்க வேண்டும்
இது குறித்து தமறாக்கி வடக்கு விவசாயி லட்சுமணன் கூறியதாவது: கொத்தங்குளம் கண்மாய் பாசனத்தை நம்பி ஏக்கருக்கு ரூ.25,000 வரை செலவு செய்து, கல்சர், ஆர்.என்.ஆர்.,அக்சயா ரக நெல்லை நடவு செய்துள்ளனர். உப்பாறு ஆற்றில் இருந்து கொத்தங்குளம் கண்மாய்க்கு முழுமையாக தண்ணீர் வந்தால் தான், ஒரு போகம் அறுவடை செய்ய முடியும். ஆனால், சேதமான வரத்து கால்வாயை பொதுப்பணித்துறையினர் சீரமைத்து தராததால், மழை நீர் கண்மாய்க்கு வராமல் விரயமாகிறது, என்றார்.
02-Nov-2024