சேதமான சமுதாயக் கூடம்
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆதி திராவிடர் தெருவில் பராமரிப்பில்லாத சேதமடைந்த பழைய சமுதாயக்கூடத்தை அகற்றி புதிய சமுதாயக் கூடம் கட்ட குடியிருப்புவாசிகள் கோரியுள்ளனர்.திருப்புத்துார் மதுரை ரோட்டில் உள்ள இக்குடியிருப்பில் 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பயன்படுத்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. சிறு விழாக்கள் நடத்த பயன்படுத்தி வந்தனர். பின்னர் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்துள்ளது. குடியிருப்புவாசிகள் பழைய கட்டடத்தை அகற்றி விட்டு, மின்சாரம், தண்ணீர், சமையல் அறை வசதியுடன் புதிய சமுதாயக் கூடம் அமைக்க கோரியுள்ளனர்.