உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாக்கோட்டை அருகே சேதமடைந்த நிழற்குடை

சாக்கோட்டை அருகே சேதமடைந்த நிழற்குடை

காரைக்குடி: சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்காத்தங்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. செங்காத்தங்குடி, பாணங்காடு, சானாங்காடு, ஈஞ்சவயல், கரைகொண்டான், பாராவயல், வெட்டிவயல் உட்பட 14 சிற்றூர்களை கொண்ட பெரிய ஊராட்சியாக உள்ளது. செங்காத்தங்குடியில் பயணிகள் நிழற்குடை பல வருடங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நிழற்குடையின் மேற்பகுதி உடைந்து விழுந்தது. இதனால் பயணிகள் நிழற்குடையில் அமராமல் வெளியிலேயே நிற்க வேண்டி உள்ளது. அதிகாரிகள் கூறுகையில்: சேதமடைந்த பஸ் ஸ்டாப் மராமத்து பணி செய்ய அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மராமத்து பணி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி