உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோட்டோர திறந்தவெளி கிணறுகளால் ஆபத்து

ரோட்டோர திறந்தவெளி கிணறுகளால் ஆபத்து

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள திறந்த வெளி கிணறுகள் ரோடு ஓரங்களில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.சிவகங்கை அருகே மானாமதுரை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சுற்றுச்சாலையாக செல்கிறது. இந்த சாலை வழியாகத்தான் தஞ்சாவூர் புதுக்கோட்டை திருச்சி மாவட்ட மக்கள் மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்கின்றனர். அதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி தான் திருச்சி தஞ்சாவூர் புதுக்கோட்டை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.இந்த சாலையில் தினசரி 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் 24 மணிநேரமும் செல்கிறது. மிகுந்த போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாகவும் உள்ளது.இந்த சாலையில் வாணியங்குடியில் இருந்து தென்னிலை வயல் கிராமம் வரை 3 இடத்தில் சாலையின் ஓரத்தில் திறந்த வெளி கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பு இன்றி திறந்தவெளியில் தடுப்புச்சுவர் சிறியதாக தேசிய நெடுஞ்சாலை் அருகாமையில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சாத்தான்குளம் அருகே சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் கார் கட்டுபாட்டை இழந்து பாய்ந்ததில் 5 பேர் பலியாயினர். எனவே மாவட்ட நிர்வாகம் சாலையின் ஓரத்தில் பள்ளங்களோ கிணறுகளோ இருந்தால் அதை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு போர்டு வைக்க வேண்டும். யாருக்கும் பயன்படாத கிணறுகள் பள்ளங்களை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி