உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்

சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்

காரைக்குடி: காரைக்குடியில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டடங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்று கட்டட வேலைக்கும் ஏராளமானோர் செல்கின்றனர். மேலும் பள்ளத்துார் கண்டனுார் புதுவயல் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளுக்கும் வேலைக்காக ஏராளமான தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். தினசரி வேலைக்குச் செல்வோருக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் இங்குள்ள தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தடுக்க வேண்டிய போலீசாரும் கண்டு கொள்வதில்லை. விபத்து அபாயம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல், கூட்டம் கூட்டமாக மக்கள் சரக்கு வாகனத்தில் பயணம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை