மேலும் செய்திகள்
குடிகார கணவனை குழி தோண்டி புதைத்த மனைவி
16-Jul-2025
தேவகோட்டை: தேவகோட்டை அருகே சருகணி கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி ரஹ்மத் மிஷா. இவரது மூத்த மகள் அதிபா 11., மாணிக்கம் கேரளாவில் வேலை செய்கிறார். மனைவி சருகணியில் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை தாயார் ரஹ்மத்மிஷா, தனது இரண்டு மகள்களுடன் பொன்னலிக்கோட்டை பள்ளிவாசலுக்கு சென்று விட்டு டூவீலரில் கோபாலபுரத்திற்கு திரும்பினார். சூராணம் ரோடு விலக்கில் திரும்பும் போது, அந்த வழியாக காரைக்காலில் இருந்து தொண்டி, மதுரை வழியாக கேரளாவிற்கு செந்தில்குமார் 48., ஓட்டி வந்த லாரி முன்னால் சென்ற ரஹ்மத்மிஷா டூவீலரில் மோதியது. இதில் காயமடைந்த மூத்த மகள் அதிபா சிகிச்சைக்கு செல்லும் போது இறந்து போனார். தாயார் ரஹ்மத்மிஷா, மற்றொரு மகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவேகம்புத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16-Jul-2025