சிவகங்கைக்கு துணை முதல்வர் உதயநிதி வருகை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு திட்ட பணிகள் ஆய்வு, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.பயனாளிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், சிவகங்கை நகராட்சி தலைவர் துரைஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன், கமிஷனர் கிருஷ்ணராம், பொறியாளர் முத்து, நகராட்சி கவுன்சிலர்கள், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் சண்முகம், தி.மு.க., மாவட்ட செய்தி தொடர்பாளர் அயூப்கான், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கேசவதாசன், திருப்புவனம் பி.டி.ஓ.,க்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், திருப்புவனம் ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் திருநாவுக்கரசு , எஸ்.புதுார் ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் செழியன், லட்சுமணராஜூ, சிவகங்கை முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், சிவகங்கை மேற்கு ஒன்றிய செயலாளர் மந்தக்காளை பங்கேற்றனர்.