உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெரியகோட்டையில் கட்டமைப்பு வசதிகள் இருந்தும் பயனில்லை! அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் தவிப்பு

பெரியகோட்டையில் கட்டமைப்பு வசதிகள் இருந்தும் பயனில்லை! அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் தவிப்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே பெரியகோட்டை ஊராட்சியில் அனைத்து கட்டமைப்பு வசதிகள் இருந்தும், பயனின்றி வீணாகி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகோட்டை ஊராட்சியில் காந்திநகர், செங்கரை, வெள்ளிப்பட்டி உட்பட 12 சிற்றூர்களில் 5000பேர் வசிக்கின்றனர். இங்கு மகளிர் சுகாதார வளாகம், சமுதாயக்கூடம், துணை சுகாதார நிலையம், சாலைகள் என அனைத்து வசதிகள் இருந்தும் பயன்படுத்த முடியாத அவல நிலை நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர். தெருவிளக்கு இல்லாமல் வீதிகள் பலவும் இருளில் மூழ்கி கிடக்கிறது. பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. மக்கள் பயன்படுத்தும் குளங்கள் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து காளியம்மாள் கூறியதாவது, ஏழை எளிய மக்கள் அதிகம் வசித்து வரும் இப்பகுதியில் பெண்களுக்காக மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பலரும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக நியமிக்கப்பட்ட வட மாநில இளைஞர்கள் சமுதாய கூடத்தில் தங்கி மகளிர் சுகாதார வளாகத்தை பயன்படுத்தினர். இதனால் பெண்கள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பணி முடிந்து, அவர்கள் சென்ற நிலையில் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத வகையில் கிடக்கிறது. ஆழ்துழாய் கிணறும் பழுதாகிவிட்டது. இதனால் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகிறோம் என்றார். இது குறித்து பாண்டி கணேஷ் கூறியதாவது, பெரியகோட்டைக்கு ரோடு போட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. சாலை வசதியின்றி வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். டவுன் பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. துணை சுகாதார நிலையம் உட்பட அனைத்து தெருக்களிலும் மின்விளக்குகள் இன்றி இருளில் மூழ்கி கிடக்கிறது. பல முறை சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை