மஸ்ட் திருக்கோஷ்டியூர் கோயிலில் பக்தர்கள் வினோத பிரார்த்தனை
திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வீடு கட்ட பக்தர்கள் பிரகாரத்தில் தரையில் கற்களை அடுக்கி பிரார்த்திப்பது அதிகரித்து வருகிறது.இக்கோயிலில் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு பெண்கள் கோயில் மற்றும் தெப்பக்குளக்கரையில் தீபம் ஏற்றி வழிபடுவது முக்கியமானபிரார்த்தனையாக நீண்ட காலமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோயிலின் தென்னமரத்து வீதியான பிரகாரத்தில்,குறிப்பாக மூலவர் சன்னதி பிரகாரத்தில் பக்தர்கள் சில கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க, தங்கள் வீடு கட்டி வசிக்கபிரார்த்திக்கின்றனர். இதனால் பிரகாரங்களில் சுற்றிலும் சிறு கற்கள் அடுக்கி இருப்பதை பார்க்க முடிகிறது.தேவஸ்தான நிர்வாகத்தினர் கூறுகையில்,‛ பக்தர்கள் தாமாக இந்த பிரார்த்தனையை நடத்தி வருகின்றனர். கடந்ததெப்ப உத்ஸவம் முடிந்த பின்னர் பக்தர்கள் பிரார்த்தனையால் சேர்ந்த கற்களை இரு டிராக்டர்களில்எடுத்து சென்று அப்புறப்படுத்தினோம்' என்றனர்.