தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 29ம் தேதி காப்பு கட்டுடன் துவங்க உள்ள நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, நேர்த்தி செலுத்தினர். இக்கோயிலில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நேர்த்தி செலுத்துவர். இந்த ஆண்டிற்கான பங்குனி விழா மார்ச் 29 அன்று இரவு 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்.,5ல் பொங்கல் விழா, ஏப்., 6ம் தேதி மின் அலங்கார தேர்பவனி, ஏப்., 7ம் தேதி பால்குடம் நடைபெறும். பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்கிறார். பங்குனி மாதப்பிறப்பில் இருந்தே பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஞாயிறன்று அதிகாலை முதலே பக்தர்கள் இங்கு வருகை தந்து, அம்மனை தரிசித்தனர். அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை நேர்த்தி செய்தனர். கரும்பு தொட்டில் கட்டியும், அங்கபிரதட்சனமும் செய்து அம்மனை வழிபட்டனர்.